வெஜ் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி - 7
முட்டைக்கோஸ் - 100 கிராம்
காரட் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லித் தழை - சிறிது
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
தக்காளி - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
இட்லியை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோஸ் மற்றும் காரட் துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு முட்டைக்கோஸ், காரட் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் இட்லியை போட்டு நன்கு பிரட்டவும். தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
மிகவும் எளிதாக செய்யக்கூடிய வெஜிடபிள் இட்லி ரெடி.