வெஜ்டபுள் கோதுமை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்

முட்டை கோசு - 1/2 கப்

காரட் - 1/2 கப்

பீன்சு - 1/2 கப்

கீரை - 1/2 கப்

காலி ஃப்லர் - 1/2 கப்

வெங்காயம் - 1 கப்

குடை மிளகாய் - 1/2 கப்

சாட் மசாலா - தேவையான அளவு

மிளகு தூள் - தேவையான அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

கரிவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லி தலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன்,முட்டைகோசு,காரட்,பீன்சு,கீரை,காலி ஃப்லர்,வெங்காயம்,குடை மிளகாய்,மிளகு தூள்,உப்பு, சீரகம்,கரிவேப்பிலை,கொத்தமல்லி தலை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் கைகளிள் மாவை எடுத்து தோசை கல்லில் பரப்பி விட்டு,மேலே சாட் மசாலா தூவி,எண்ணைய் விட்டு திருப்பி போட்டு வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்: