வெஜிடபுள் தோசை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - இரண்டு கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
குடைமிளகாய் - பாதி
கருவேப்பில்லை - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.கேரட்டை துருவி வைக்கவும்,பீன்ஸ் ,குடைமிளகாயை நறுக்கவும்.
வாணலியில் நெய் விட்டு எல்லா காயையும் பொன்னிறமாக வதக்கவும்.
தோசை கல்லில் தோசை மாவை விட்டு இந்த வந்தக்கிய காய்களை சேர்த்து மேலே நெய் விடவும்,கருவேப்பில்லை கொத்தமல்லி பொடியாக நறுக்கி தோசை மேலே தூவவும்.
தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சிம்மில் வைத்து மறுபுறம் வேக வைக்கவும்.