வெஜிடபிள் கிச்சடி

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை - 1/4 கிலோ

கேரட் - 2

பீன்ஸ் - 10

பட்டாணி - 50 கிராம்

பச்சைமிளகாய் - 4

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, மல்லி தழை - கொஞ்சம்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

பட்டை - சிறு துண்டு

பிரிஞ்சி இலை - 1

சோம்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் + நெய் - 100 மி.லி

செய்முறை:

ரவையை வெறும் கடாயில் வறுக்கவும். காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கூறியுள்ள பொருட்களை லேசாக தட்டி வைக்கவும்

கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின்னர் காய்கறி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் ரவையின் அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லித்தழை வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.