வெஜிடபிள் உப்புமா
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட், பீன்ஸ், பீஸ் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
சில்லிப்பொடி - 1/4 தேக்கரண்டி
மல்லி புதினா - கொஞ்சம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
ரவையை மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸ் கட் செய்து, அதனுடன் உரித்த பீஸ் ரெடி செய்து கொள்ளவும். மல்லி, புதினா, வெங்காயம், தக்காளியையும் கட் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா போட்டு வதக்கி, தக்காளி, சில்லிபவுடர், மஞ்சள் பொடி, காய்கறிகள், மிளகாய், உப்பு போட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி திறக்கவும்.
பின்பு அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, மல்லி புதினா சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும். கொதிவந்தவுடன் வறுத்த ரவையை போட்டு கிளறவும்.
உப்புமா பதம் வந்தவுடன் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறினால் தயாராகிவிடும்.