வெஜிடபிள் இட்லி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 250 கிராம்

பச்சரிசி - 125 கிராம்

உளுத்தம்பருப்பு - 100 கிராம்

காரட் - 100 கிராம்

கோஸ் - 100 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 5

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிது

சீரகம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல் நாள் மாலை புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு அரைப்பது போன்று அரைத்து அதில் தேவையான உப்பு சேர்த்து கலக்கி மூடி வைத்து விடவும்.

மறுநாள் காலையில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவைகளைச் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள காய்கறிகளை இதில் கொட்டி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

காய்கறி நன்றாக வதங்கியதும், இட்லி மாவில் கொட்டி நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: