வெஜிடபிள் இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 6
கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், முளைகட்டிய பட்டாணி, காளிப்ளவர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உளுந்து - சிறிது
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மசாலாவிற்கு:
நிலக்கடலை - ஒரு கைப்பிடி
தேங்காய் - ஒரு சில்லு
பூடு - 8
வரமிளகாய் - 2
பட்டை - 1
ஏலக்காய் - 2
லவங்கம் - 3
செய்முறை:
இடியாப்பம் உதிர்த்து வைக்கவும்
காய்கறிகளை பொடியாக நறுக்கவும்
மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்
அத்துடன் உப்பு,மஞ்சள்தூள்,கொத்தமல்லி சேர்க்கவும்.
பின்னர் காய்கறிகள் சேர்த்து சிறிதாவு சுருண்டதும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
காய்கறி வெந்தது மசாலா சுருண்டதும் இடியாப்பம் சேர்த்து கிளறவும்.