வெங்காய வெற்றிலை தோசை
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1/2 கப்
வெற்றிலை - 2
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் வெற்றிலையை தோசை மாவில் தோய்த்து கல்லில் போடவும்.
அதன் மேலே நறுக்கின வெங்காயம், தேங்காய் பூ, சிறீது கறிவேப்பிலை தூவவும். சில நொடிகள் வேகவிடவும். பின்னர் அதன் மேல் எண்ணெய் ஊற்றி, மேலும் சிறிது தோசை மாவை ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்து இருக்கும். பிறகு அதனைத் திருப்பி போட்டு வேக வைக்கவும். இரண்டு புறமும் மாவு வெந்த பிறகு எடுத்து விடவும்.
குறிப்புகள்:
இந்த வெற்றிலை தோசை ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்து.