வெங்காய கொத்தமல்லி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்

வெங்காயம் - 3

கொத்தமல்லி தழை - 1/2 கட்டு

பச்சை மிளகாய் - 2

மாவு கலக்க:

இட்லி சோடா - ஒரு பின்ச்

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசை மாவில் கலக்க வேண்டியவைகளை போட்டு தோசை ஊற்றும் பதத்திற்கு கலக்கி கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கி விட்டு மண் இல்லாமல் ஒரு புளி வடிக்கட்டியில் வைத்து நன்கு அலசி மாவில் கலக்கவும். பத்து நிமிடம் கழித்து சுட்டு சாப்பிடவும்.

குறிப்புகள்: