வாழைப்பழ தோசை





1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த பச்சை வாழைப்பழம் - 2
பச்சரிசி - 2 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியுடன் வெந்தயத்தை கலந்து நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு, வாழைப்பழம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கி விட்டு பத்து மணிநேரம் (அ) இரவு முழுவதும் புளிக்க விடவும்.
பின்னர், ஒரு தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக சுற்றி, தோசை வார்த்து எடுத்து பரிமாறவும்
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.