வாழைப்பழத் தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி (சாதாரண அரிசி) - 1 கப்

பழுத்த வாழைப்பழம் (நடுத்தரமான அளவில்) - 5

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் (ருசிக்கேற்ப) - 5 அல்லது 6

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை சுமார் ஒரு மணி நேரம் நன்கு ஊறவைத்து பிறகு நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அரிசியுடன் மசித்த வாழைப்பழம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்டு தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் நான்-ஸ்டிக் தவா ஒன்றினை வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் தடவவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாவினை தோசைகளாக ஊற்றி, மூடி வைத்து வேகவிடவும்.

தீயின் அளவு மிதமாக இருக்கவேண்டும். இது சீக்கிரமே வெந்துவிடும்.

தோசையைத் திருப்பிப் போட்டு ஒரு நிமிடம் வேகவிட்டு எடுத்துவிடவும்..

குறிப்புகள்: