வள்ளிகிழங்கு தோசை
0
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 2 கப்
அரிசி - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியுடன் கிழங்கு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
புளிக்க தேவையில்லை உடனே தோசையாக வார்க்கலாம்.
குறிப்புகள்:
தேங்காய் அல்லது வேர்கடலை சட்னியுடன் பரிமாறவும்.