வதக்கிய இடியாப்பம்

on on on off off 8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 3

முட்டை - 2

பூண்டு - 4 பல்

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

நெய் - 1 தேக்கரண்டி

பால் - சிறிதளவு

சர்க்கரை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இடியாப்பத்தை பால் தெளித்து உதிர்த்து கொள்ளவும்.

முட்டையில் மிளகு தூள், உப்பு போட்டு நன்கு அடித்து கொள்ளவும்.

நல்லெண்ணெயை சூடுப்படுத்தி வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். பிறகு அதில் முட்டை கலவையை ஊற்றி கிளறி கொண்டே முக்கால் பதம் வேகும் போது உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி நெய்யை உற்றி கொஞ்சம் சர்க்கரை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: