ரொட்டி உப்புமா
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 10 துண்டு
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை,கொத்தமல்லி - தேவையான அளவு
கடுகு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, மல்லியை பொடியாக நறுக்கவும்.ப்ரெட் துண்டுகளை பொடியாக நறுக்கி வைக்கவும்..
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு ப்ரெட் துண்டுகளை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு ,சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி ,உப்பு, இஞ்சி பூண்டுவிழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் அரை தம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ப்ரெட் துண்டுகளை சேர்த்து மல்லி,கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.