ரொட்டி
6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமைமா - 500 கிராம்
பால் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
கொதிநீர் - தேவையான அளவு
சிறிது சிறிதாக வெட்டிய பெரிய வெங்காயம் - 1
சிறிய வட்டமாக வெட்டிய பச்சைமிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமைமா, உப்பு, பால், பட்டர், முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.
வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும். இருபக்கமும் வெந்ததும் சுவையான ரொட்டி தயராகி விடும்.