ராயல் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

கேரட் - 1

பீன்ஸ் - 5

பச்சை பட்டாணி - 10

முந்திரி - 6

பாதாம் பருப்பு - 4

பிஸ்தா - 5

உலர் பழங்கள் - 2 தேக்கரண்டி

பிரட் ஸ்லைஸ் - 1

பனீர் - 100 கிராம்

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 15

பச்சை மிளகாய் - 5

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

நெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பட்டாணியை தோல் உரித்து வைக்கவும்.

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

பாதாம் பருப்பை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, தோல் உரிக்கவும்.

பிரட் ஸ்லைஸை சிறு துண்டுகளாக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, பிரட்டை பொரித்து எடுக்கவும்.

அடுத்து பனீர் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.

முந்திரி, பாதாம் பருப்பு, பிஸ்தா, உலர் பழங்கள் அனைத்தையும் வறுத்து எடுக்கவும்.

ரவையை அதே வாணலியில் வறுத்து எடுக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், பட்டாணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்கு வதங்கிய பின் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் போது ரவையை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.

1 ஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு, பிஸ்தா, உலர் பழங்கள், பொரித்த பிரட் ஸ்லைஸ், பனீர் அனைத்தையும் தூவி, நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: