ராஜ்மா ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

நெய் - 1 தேக்கரண்டி

ராஜ்மா - 1 கப்

பூண்டு - 6 பல்

பெரிய வெங்காயம் - 1

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

சில்லி கார்லிக் சாஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ராஜ்மாவை பத்து மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

ஆறியதும் கைகளாலேயே ஒன்றிரண்டாக மசித்துவைக்கவும்.

பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி. பூண்டு, வெங்காயத்தை வதக்கி அத்துடன் ராஜ்மா, சாஸ், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

மாவை சிறிது சிறிதாக எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து எடுத்து அதனுள் ராஜ்மா பூரணத்தை வைத்து சோமாஸ் போல அரை வட்டமாக மடிக்கவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு ரொட்டியாக போட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: