ராகி தோசை (1)
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 3 கப்
பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 கப்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 3
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2 இனுக்கு
சீரகம் - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ராகி மாவை உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு பொரித்து கரைத்த மாவில் சேர்க்கவும்.
பின் அதை நன்கு கலக்கி, தோசைக்கல்லில் தோசையாக சுட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.