ராகி இடியாப்பம் நூடுல்ஸ்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1/4 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 5

தேங்காய்பால் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ராகி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வெதுவெதுப்பான நீரை அதில் ஊற்றி, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின் இடியாப்ப அச்சியில் விட்டு பிழிந்து வேக வைத்து எடுத்து, உதிர்த்து வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது, நறுக்கின தக்காளி, நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.

அத்துடன் உதிர்த்த ராகி இடியாப்பத்தை சேர்த்து கிளறி, தேங்காய் பால் விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி, கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: