ரவை பணியாரம்
6 - Ok!
2 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 3 கப்
பச்சரிசிமாவு - 3 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
வெல்லம் (பொடிபண்ணியது) - 5 கப்
முட்டை - 3
ஏலக்காய் - 4
நெய் - 3/4 கப்
செய்முறை:
ரவை, பச்சரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து மிக்ஸியில் ஒருமுறை ஓட்டவும்.
அதன் பின் தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தையும் போட்டு, முட்டையும் உடைத்து ஊற்றி, மறுபடியும் மிக்ஸியில் போட்டு ஓட்டிவிட்டு கெட்டியான மாவு பதத்தில் எடுக்கவும்.
ஏலக்காயை தூள் செய்து போடவும், மாவு பணியாரம் செய்யும் பதத்தில் இருக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்)
அடுப்பில் குழிப்பணியாரம் கல்லை வைத்து நெய்விட்டு கலந்த மாவை குழியில் கொஞ்சமாக விட்டு நன்றாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.