ரவை தோசை
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 200 கிராம்
மைதா - 200 கிராம்
புளித்த தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிது
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
ரவையை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் மைதா, தயிர், பொடியாக வட்டமாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீயாக கரைக்க வேண்டும்.
அதனுடன் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு மாவை தோசைக்கல்லில் ஓரத்தில் இருந்து வட்டமாக ஊற்றி நடுவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
சிறிது எண்ணெய் விட்டு தோசையை மூடி வேக விட வேண்டும். வெந்ததும் தோசையை திருப்பி போட்டு முறுக விட்டு எடுக்க வேண்டும்.