ரவை அடை
தேவையான பொருட்கள்:
ரவை - 500 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
மல்லி தழை - ஒரு பிடி
பட்டர் - 100 கிராம்
முட்டை - ஒன்று
தேங்காய்ப்பால் - 165 மி.லி டின் ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு நாண் ஸ்டிக் கடாயில் ஒரு மேசைக்கரண்டி பட்டரை போட்டு சூடானதும் அதில் ரவையை கொட்டி லேசாக கலர் மாறுமளவு வறுக்கவும்.
பிறகு அதை நன்றாக ஆற விடவும்.
முட்டை, தேங்காய்ப்பால் பொடிதாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், மல்லி, மேலும் உப்பு சேர்த்து நன்கு பிசறவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். (அடை மாவு பதத்திற்க்கு)
பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவை அடுப்பில் ஏற்றி சூடானதும் அதில் அடைமாவை அரை அங்குல உயரத்திற்கு பரப்பினாற்போல் இடவும். மிதமான தீயில் வேக விடவும்.
இப்பொழுது ஓரத்தில் பட்டரை விடவும் வெந்து சிவக்கும் தருவாயில் அடையை திருப்பி போடவும் தேவைப்பட்டால் மீண்டும் பட்டரை ஓரங்கலில் விடலாம். நன்றாக வெந்தவுடன் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம் இது மாலை நேர சிற்றுண்டி.