ரவா பொங்கல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 200 கிராம்

பாசிப்பருப்பு - 100 கிராம்

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

முந்திரி - 6

இஞ்சி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

நெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.

சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, ரவையையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க விட்டு, வெந்த பாசிப்பருப்பு, ரவை, உப்பு சேர்த்து கிளறவும்.

ரவை வெந்ததும் மீதி நெய்யில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி வறுத்து நெய்யோடு பொங்கலில் கொட்டவும்.

நன்கு கிளறி சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: