ரவா புளி உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

வரமிளகாய் - 3

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

வரமிளகாயை கிள்ளி வைக்கவும். வெந்தயம், பெருங்காயத்தை வாசனை வர வறுத்து நன்றாக பொடித்து வைக்கவும்.

புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி முக்கால் லிட்டர் கரைசலாக கரைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

புளி கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய வரமிளகாய் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து, ரவையை போட்டு நன்றாக வதக்கவும்.

ரவை நன்றாக வதங்கி வாசனை வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கொதிக்கும் புளிக்கரைசலை எடுத்து ஊற்றவும்.

கட்டி தட்டாமல் நன்றாக கிளறி ரவை வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: