ரவா கிச்சடி
தேவையான பொருட்கள்:
ரவா - 1/4 கிலோ
நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிப்ளவர் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிபூ, மராட்டி மொக்கு, ஏலக்காய் தலா - 2
முந்திரி - 15
பச்சை மிளகாய் - 3
நெய் - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணை - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணை + பாதி நெய் விட்டு மசாலா பொருட்களை தாளிக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, காய்கறி சேர்த்து வதக்கவும்
ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர் அளந்து அத்துடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்
ரவையை கொட்டி கிளறவும். நன்றாக வெந்ததும் மீதி நெய்யை சேர்த்து கிளறவும்.
குறிப்புகள்:
சுவையான இந்த கிச்சடியை கெட்டி சட்னியுடன் பறிமாறவும்