ரவா இட்லி (4)
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
இஞ்சி - 1/2 அங்குல துண்டு
கடுகு -1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையை வெறும் வாணலியில் சூடேறும் வரை வறுத்து வைக்கவும்.
இரவு இட்லி செய்வதாக இருந்தால் காலையிலேயே உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து, வறுத்த ரவையுடன் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
இட்லி ஊற்றுமுன் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய முந்திரி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும்.
தயிரையும் சேர்த்து கலக்கி 5 நிமிடம் விட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
சூடாக தக்காளி சட்னி, கலவை சட்னியுடன் நன்றாக இருக்கும்.