ரவா அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன ரவை -- 2 கப்

தேங்காய் துருவல் -- 1 கப்

பச்சை மிளகாய் -- 3 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி -- ஒரு சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

புளித்த தயிர் -- 1 கப்

உப்பு --ருசிக்கேற்ப

கொத்தமல்லி தழை -- 2 டேபிள்ஸ்பூன்(பொடிதாக நறுக்கியது)

எண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்

கடுகு -- 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை -- 1 இனுக்கு (பொடிதாக அரிந்தது)

செய்முறை:

வாணலியில் எண்ணையை ஊற்றி கடுகு,கறிவேப்பிலையை தாளிக்கவும்.

அடை செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.தாளித்ததை அதில் கொட்டவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடைமாவாக கலக்கி அரைமணி நேரம் ஊறவிடவும். (வழக்கமாக செய்யும் அடையை விட சற்று கெட்டிமாவாக இருக்க வேண்டும்)

தோசைக்கல்லை சூடாக்கி அடை மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணைய்/நெய் ஊற்றி பொன்னிற அடைகளாக சுட்டு எடுக்கவும்.

ரவா அடை ரெடி.

குறிப்புகள்: