மைதா தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 கப்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பவுடர் - 1/2 தேக்கரண்டி
புளித்த தயிர் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லித் தழை - சிறிது
தண்ணீர் - மாவைக் கரைக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதாமாவு, அரிசிமாவு, புளித்த தயிர், உப்பு, பெருங்காயப்பவுடர், தேவையான அளவு தண்ணீர் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கரைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லியை கரைத்த மாவில் போட்டு கலக்கவும்.
பிறகு அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லில் ரவா தோசை ஊற்றுவது போல் ஊற்றி தோசை வார்க்கவும்.
குறிப்புகள்:
மிளகாய் பொடியும் தொட்டுக் கொள்ளலாம்.