மைதா தோசை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு பெரிய கப்

முட்டை - 2

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 1

மல்லி தழை - சிறிது

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சோம்பை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.

மைதா மாவில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து பிசையவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கியவற்றை போடவும். சோம்பையும் போடவும்.

பின்னர் நன்கு கலக்கி தோசைமாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி வெந்ததும் எண்ணெய் ஊற்றி திருப்பி விட்டு சிவக்க எடுக்கவும். தோசை தயார்.

குறிப்புகள்:

இது சிக்கன் குழம்புக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் சட்னியுடனும் சாப்பிடலாம்.