மைதா அடை (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப்

தேங்காய் - 1/2 மூடி

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

வெங்காயம் - 1 சிறியது

பச்சைமிளகாய் - 3

மல்லித்தழை - சிறிது

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 1/4 கப்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

தேங்காயுடன், மஞ்சள், சோம்பு சேர்த்து சிறிது நீர் சேர்த்து,மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

எண்ணெய் தவிர அனைத்துபொருட்களையும் கலந்து சிறிது நீர் விட்டு தோசை மாவு பததில் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு குழிகரண்டி அளவு எடுத்து ஊற்றி கனமாக வார்க்கவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகச்செய்யவும்.

சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: