மைசூர் அடை (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு

பச்சரிசி - அரை ஆழாக்கு

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

வரமிளகாய் - 5

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - அரைக் கட்டு

செய்முறை:

பருப்பு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து வரமிளகாய், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

கடைசியில் தேங்காய் சேர்த்து அரைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல்லை சூடாக்கி அடையாக ஊற்றி வெந்தவுடன் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்: