மூலி ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2 சிறியது

கோதுமை மாவு - 1/4 கிலோ

வெங்காயம் - 1

சில்லி பவுடர் - சிறிது

மஞ்சள் பவுடர் - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஓமம் (விருப்பப்பட்டால்) - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். வெங்காயம் பொடியாக கட் செய்யவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், முள்ளங்கி, உப்பு, மஞ்சள் பொடி, சில்லி பவுடர் சேர்த்து வதக்கி ஒரு விசில் விட்டு வைக்கவும்.

ஆறியவுடன் அதனோடு கோதுமை மாவு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அரை மணி நேரம் கழித்து உருண்டைகளாக்கி மாவு போட்டு வட்டமாக பரத்தி சுட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கலாம்.

குறிப்புகள்:

தால் உடன் பரிமாறவும்