முழு உளுந்து அடை
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
புழுங்கரிசி - 1 கப்
கறுப்பு முழு உளுந்து - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 2 தேக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
காயம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து
எண்ணை
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் நன்கு கழுவி மிளகாய் வற்றலுடன் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கர கரவென்று அரைத்துக் கடைசியில் மிளகு, ஜீரகம், காயம், கருவேப்பிலை சேர்த்து ஒரு திருப்புத் திருப்பி வழிக்கவும்.
மாவு மிகவும் நைசாக அரையக் கூடாது. மாவு புளிக்க வேண்டாம்.
அடைக் கல்லைக் காயவைத்து, மெல்லிய அடைகளாக, முறுகலாக வார்த்தெடுக்கவும்.