முழுபயறு தோசை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு -1 கப்

இட்லி அரிசி -1 கைப்பிடி

இஞ்சி -1 துண்டு

காய்ந்தமிளகாய் - 1

எண்ணை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பு அரிசி இரண்டையும் 5 - 6 மணி நேரம் ஊறவைத்து இஞ்சி, மிளகாய் சேர்த்து பொருபொருவென அரைக்கவும்.

உப்பு போட்டு கலந்து 1/2 மணிநேரம் வைக்கவும். மாவு புளிக்க தேவையில்லை.

தோசைக்கல்லை காயவைத்து எண்ணை தடவி ஒருகரண்டி மாவை ஊற்றி சுற்றி எண்ணை விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

காரமான சட்னியுடன் பரிமாறவும்.