முள்ளங்கி பரோட்டா
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி மாவு - 3 கப்
துருவிய முள்ளங்கி - 1 1/2 கப்
வேகவைத்து மசித்த உருளை - 1/2 கப்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சப்பாத்தி மாவை பிசைந்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கியில் சிறிது உப்பு போட்டு கலந்து வைக்கவும். முள்ளங்கி தண்ணீர் விடும். அதை பிழிந்து விடவும்.
முள்ளங்கியுடன் மசித்த உருளை, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகம், மஞ்சள்தூள், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து தண்ணீர் விடாது பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி மாவை பூரி அளவு உருட்டி அதனுள் தயாரித்த கலவையை கொஞ்சம் வைத்து மூடி சப்பாத்தியாக இட்டுக் கொள்ளவும்.
தவாவில் எண்ணெய் தடவி பரோட்டா இருபக்கமும் வேகும் வரை திருப்பி போட்டு எடுக்கவும்.