முள்ளங்கி அடை
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 200 கிராம்,
அரிசி மாவு - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 6,
பெரிய வெங்காயம் - 4,
கொத்துமல்லி - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவை லேசாக வறுக்கவும்.
முள்ளங்கியை தோல் சீவி துருவி கொள்ளவும்.
வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
நறுக்கியவற்றுடன் அரிசி மாவு, முள்ளங்கி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
வாழையிலையில் அடையாக தட்டி தோசைக்கல்லில் சிவக்க சுட்டு எடுக்கவும்.