முர்தபா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க:

மைதா - 1/2 கிலோ

நெய் - 2 தேக்கரண்டி

சோடாப்பு - 1 சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

உள்ளடம் செய்ய:

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2

பொடியாக அரிந்த கேரட் - 2

பொடியாக அரிந்த உருளை கிழங்கு - 1

வேகவைத்த இறைச்சி - 1 கப்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

வேக வைத்த பச்சை பட்டாணி - 1 கப்

முட்டை - 3

கரம்மசாலா - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவில் உப்பு, சோடாப்பு போட்டு கலந்து அதில் நெய்யை காய்ச்சி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து முதலில் கேரட் மற்றும் உருளையை போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும்.

பின் அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

கடைசியாக கரம்மசாலா தூள்,மஞ்சள் தூள்,பட்டாணி,இறைச்சி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆரவிடவும்.

மாவை எலுமிச்சை அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.முட்டைகளை ஒரு கோப்பையில் கலக்கி வைக்கவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்து அதை மெல்லியதாக வளத்தி அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் உள்ளடத்தை கொஞ்சம் வைக்கவும்.

அதன் மேலே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் ஊற்றவும்.

மாவை மேலும் கீழுமாக மடக்கவும்.

பின் பக்க வாட்டையும் மடக்கவும்.

இவ்வாறு சதுர வடிவில் வரும்.

பின் அவற்றை எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: