முட்டை ரொட்டி (1)
தேவையான பொருட்கள்:
மைதா - 1/4 கிலோ
முட்டை - 6
சர்க்கரை - சிட்டிகை
பால் - 1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது - 1 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 3
அரைத்த தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1/2 கப் பாலில் சர்க்கரை, உப்பு, சர்க்கரை ஒரு முட்டை சேர்த்து கலக்கி மைதாமாவு சேர்த்து சப்பாத்திக்கு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்தமாவை உருண்டைகள் செய்து எண்ணெய் தடவி ஊற வைக்கவும்.
மீதி உள்ள 5 முட்டைகளை அடித்து கலக்கி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சில்லி ஃபிளேக்ஸ், மல்லித்தழை, தேங்காய் விழுது உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மைதா உருண்டையை மெலிதாக பரத்தி, அதன் மீது எண்ணெய் தடவி, மெலிதான பிரில் வைக்கவும்.
அதை வட்டமாக சுற்றி வைக்கவும்.
இப்படி எல்லா மாவிலும் தயார் செய்து விட்டு கனமான பரோட்டாக்களாக தேய்த்து சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். முட்டைக்கலவையை பரோட்டா மீது
ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து பரவலாக ஊற்றவும். கீழ்பக்கம் வெந்ததும் மெதுவாக திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் வேகவைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடாக சாஸ், ஊறுகாயுடன் பரிமாறவும்.