முட்டை தோசை (4)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசைமாவு - 1 கப்
முட்டை - 2
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி மாவைஊற்றி பரப்பிவிட்டு முட்டைகலவையை சிறிது மாவின்மேல் ஊற்றி பரப்பிவிட்டு,1ஸ்பூன் எண்ணை விட்டு மூடிவைத்து வேகவைக்கவும்.
தோசைமுறுகலாக வெந்தவுடன் இரண்டாக மடித்து எடுக்கவும். தோசையை திருப்பிபோட தேவையில்லை.