முட்டை தோசை

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசைமாவு - 1 கப்

முட்டை - 1

வெங்காயம் (பெரியது) - ஒன்று

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 1

மல்லி இலை - சிறிது

மிளகு, சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு கடாயில் லேசாக வதக்கவும்.

முட்டையில் உப்பு, மிளகு, சீரகத்தூள் போட்டு அடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்துக் கொண்டு சிறிது கனமான தோசையாக ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.

அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தக்காளி, பச்சைமிளகாய், மல்லித்தழை தூவி திருப்பிபோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.