முட்டை ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
முட்டை - 3
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
சில்லிபிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிது
இட்லிமிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பாதியாக நறுக்கிய பின் சிப்ஸ் கட்டரால் துருவிக்கொள்ளவும்மெலிதாக,நீளநீளமான துண்டுகள் கிடைக்கும்.
பச்சை மிளகாய்,மல்லியைப்பொடியாக நறுக்கவும்.
இட்லி மாவுடன் நறுக்கியவற்றையும்,உப்பு,சில்லி பிளேக்ஸ் அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
முட்டையை உடைத்து நன்கு அடித்துக்கலக்கிக்கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து,ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றவும்.வார்க்கக்கூடாது.
சுற்றிலும் எண்ணெய் விடவும்.
முட்டையை ஸ்பூனால் ஊத்தப்பத்தின் மீது தெளித்து,அதன் மீது இட்டிலிப்பொடியை தூவி விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து,ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப்போடவும்.
சட்னி,சாம்பாருடன் சூடாக பறிமாறவும்.