முட்டை இட்லி உப்புமா
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
இட்லி - 5
பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை இனுக்கு - 2
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
இட்லி பொடி (தேவை எனில்) - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/ 2 தேக்கரண்டி
எண்ணைய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லியை நன்றாக உதிர்த்து விடவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து கடலை பருப்பை போட்டு பின் பச்சை மிளகாய் பாதி அளவு, கறிவேப்பிலை, வெங்காயம் பாதி அளவு, தே.அ உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உதிர்த்த இட்லியை சேர்த்து ஒரு வதக்கு ஒரு கையளவு தண்ணீரை இரண்டு தடவை தெளித்து நன்கு வதக்கவும்.
உப்புமா ரெடி.
முட்டையுடன் மிளகாய் தூளை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதி எண்ணைய் ஊற்றி பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
பின் அடித்த முட்டையை சேர்த்து வதக்கவும்.
முட்டை பொடியாக நன்கு வெந்த பதம் தெரியும் போது உப்புமாவை சேர்த்து கிளறவும்.
இது மிகவும் சுவையாக முட்டை சேர்த்தது போல் தெரியாமல் திடிரென்று வந்த விருந்தாளிகளுக்கு புதிய டிஷ்ஷாகவும், குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியகவும் கொடுக்கலாம்.
தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. பரிமாறும் சமயம் இட்லிபொடியை தூவி கொடுக்கலாம்.