முட்டை இடியாப்பம்
10 - Great!
4 நட்சத்திரங்கள் - 10 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 4
முட்டை - 2
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 1
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
சில்லி பவுடர் - 1/4தேக்கரண்டி
மிளகுப்பொடி - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி
மல்லி, கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இடியாப்பம் உதிர்த்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், மிளகாய், மல்லி இலை கட் செய்யவும். முட்டை உப்பு மிளகு போட்டு அடித்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,காய்ந்ததும், வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி ,தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து மசியவிடவும்.
பின்பு முட்டை சேர்த்து வெந்ததும் இடியாப்பம் சேர்த்து பிரட்டி மல்லி இலை தூவி இறக்கவும்.