முட்டை அடை

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அடை மாவு - 2 கப்

வெங்காயம் - ஒன்று

பச்சைமிளகாய் - 2

கடலை பருப்பு, உளுந்து, எண்ணெய், மிளகு, சீரகம் - தாளிக்க

முட்டை - 2

செய்முறை:

அடை மாவு ஊற வைக்கும் பொழுது ப்ரவுன் ரைஸ், எல்லா பருப்பு வகைகளிலும் ஒரு பிடி அளவு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பேனில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பச்சைமிளகாய், வெங்காயம், கடலைபருப்பு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்

தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து கலக்கவும்

முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு உப்பு, மிளகு சேர்த்து அடித்து வைக்கவும்.

தோசைக்கல் காய்ந்தததும் மாவை ஊற்றவும்

பின்பு அடித்த முட்டையை ஸ்பூனை வைத்து மேலே ஊற்றி பரப்பவும். வெந்ததும் எடுக்கவும்.

ஒரு முட்டையை இரண்டு அடைக்கு உபோயோகிக்கவும். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த அடைக்கு தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம், மிளகாய் பொடி, பூண்டு பொடி சிறந்தது. வெறுமனே சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும்.அவசரமாய் செய்ய சிறந்தது