மீந்து போன தோசை மாவில் அடை
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மீந்து போன தோசை மாவு - ஒரு கப்
கடலை பருப்பு - முக்கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - ஒரு பின்ச்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - நான்கு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலை பருப்பையும், துவரம் பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய், உப்பு, பெருங்காயம், இஞ்சி சேர்த்து கொர கொரப்பாக அரைத்து தோசை மாவுடன் கலந்து கொள்ளுங்கள்.
கலவை நல்ல கெட்டியாக இருக்கட்டும்.
இப்போது கெட்டியாக அள்ளி ஊற்றி வட்டமாக தேய்த்து நல்லெண்ணெய் விட்டு மொரு மொருன்னு சுட்டெடுக்கவும்.