மிஸ்ஸி ரொட்டி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

பொடிதாக நறுக்கிய மிளகாய் - 5

பொடிதாக நறுக்கிய தண்டங்கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அரைகீரை - 1

கடலை மாவு - 1/4 கப்

பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

டால்டா - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு சேர்த்து இவற்றை டால்டாவுடன் சேர்த்து பிசையவும்.

இதனுடன் கீரை,கொத்தமல்லி தழை, மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும்.

சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல உருட்டி தோசைக்கல்லில் போட்டு ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: