மிளகு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்

பச்சரிசி - 1/2 டம்ளர்

உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 5

பெருங்காயம் - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

நெய் - 50 கிராம்.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை ஒன்றாகவும் 3 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

பிறகு தனித்தனியாக கிரைண்டரில் போட்டு அரைத்து, ஒன்றாக கலந்து, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து 8 - 12 மணி நேரம் புளிக்க விடவும்.

புளித்த பின் ஊற்றுவதற்கு முன் மிளகை நைசாக தட்டி போட்டு சேர்த்து கலக்கி தோசைக்கல்லில் நெய் தடவி ஊற்றி, சிவக்க விட்டு, துருப்பி போட்டு நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: