மினி மசாலா இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 4 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாவை சிறுசிறு இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, மல்லித்தழையை சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, சோம்பு, உளுந்து தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதித்து வந்ததும் இட்லிகளைச் சேர்த்துப் புரட்டி, மல்லித்தழை தூவி இறக்கவும்.