மஷ்ரூம் கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 4
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 4
சிறிய பச்சை மிளகாய் - 2 அல்லது 4
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பரோட்டாவை சிறியதாக கட் செய்து கொள்ளவும். வெஙகாயம், காளான், மிளகாய், மல்லி இலை கட் செய்து கொள்ளவும். முட்டையை உப்பு, மிளகுத்தூள் போட்டு அடித்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதங்கியதும் காளான் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். 2 நிமிடம் மூடி வைக்கவும்.
அத்துடன் முட்டை சேர்க்கவும், வெந்ததும், பரோட்டாவை சேர்க்கவும், நன்றாக எல்லாம் சேரும் வரை பிரட்டவும். மல்லி இலை தூவி இறக்கவும். உப்பு போடுவதில் கவனமாக இருக்கவும், எல்லாவற்றிலும் உப்பு இருப்பதால் பார்த்து போடவும்.