மல்லி இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லிமாவு - 4 கப்
மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - ஒன்று சிறிய மூடி
பச்சைமிளகாய் - 6
புளி - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி மாவை சின்ன சின்ன இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து, இலைகளை தனியே எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், நறுக்கின மல்லி, பச்சைமிளகாய், புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு அதனை இறக்கி ஆற வைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த சட்னி, இட்லிகளைப் போட்டு ஒன்றாய் கிளறி இறக்கவும். மேலே சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.